Breaking News

போடியில் கள்ளத்தனமாக மது விற்றவர் கைது.


தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அருகே அனுமதியற்ற முறையில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக நகர் காவல் நிலையத்திற்கு சில தகவல்கள் வந்தன. அதன் அடிப்படையில் அவர் காவல் நிலைய சார்பாக குரு கௌதம் சார்பு ஆய்வாளர் அவர்கள் தலைமையில்காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.     

அப்போது போடி நந்தவனம் தெருவை சேர்ந்த பிச்சைமணி (வயது 47 )என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக தெரியவந்த நிலையில் காவல்துறையினர் மதுபாட்டில்களை கையும் களவுமாக கண்டுபிடித்தனர, மேலும் அவரை கைது செய்து 30 மதுபான பாட்டில் களையும் கைப்பற்றினார். இவர் மீது ஏற்கனவே இது போன்ற பல வழக்குகள் உள்ளதால் பலமுறை சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.காவல்துறையினர் விரைந்து செயல் பட்டதால் அவரை மதுபாட்டில்களுடன் கைது செய்யமுடிந்தது. 

No comments

Copying is disabled on this page!