கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் அதிமுக சார்பில் செயல் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கந்திலி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் புதன்கிழமை இன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட சேர்மன் லீலா சுப்பிரமணி, முன்னாள் ஒன்றிய சேர்மன் முருகன், ஒன்றிய அவைத்தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். அப்போது தம்பிதுரை பேசுகையில், தற்போது தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி முறைதான் நடைபெற்று. அதிமுக ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் திருப்பதி, செல்வம், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ரமேஷ், மற்றும் அதிமுக நிர்வாகிகள் தம்பா கிருஷ்ணன், குமார், ஆறுமுகம், தணிகாசலம், ராஜேந்திரன் மற்றும் அதிமுகவின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments