மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆயுத பூஜை விழா நடைபெற்றது.
குறிப்பாக கடந்த ஆண்டில் சங்கம் சார்பில் மருத்துவ முகாம் வணிகர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்குதல் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் வரும் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர். இதில் கௌரவத் தலைவராக ஏ.கே. சுரேஷ், செயல் தலைவராக சம்சுதீன், சங்க தலைவராக ஏ.சி. இராஜேந்திரன் செயலாளராக ப.அலெக்சாண்டர், பொருளாளராக ராஜேந்திரகுமார், துணைத் தலைவர்கள் வேல்ராஜ், ராஜன், பாபு என்ற அஜிஸ், ரமேஷ், துணை செயலாளர்கள் வ.ராஜேஷ், பாலசுப்பிரமணி, எழிலரசன், முகமது அன்சாரி, கௌரவ ஆலோசகர்கள் முகமது அலி, எம்.வி.எஸ். தமிழரசன், சாய்நாத், விஜயகுமார், செந்தில்நாதன், முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள் அபூபக்கர், கணேஷ் குமார், சார்லஸ், லஷ்மிபதி, சட்ட ஆலோசகர்கள் வழக்கறிஞர்கள் நித்திய குமார் ,மனோ, கணேஷ், சுதாகர், உள்ளிட்டவர்கள் மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் மீஞ்சூர் வியாபாரிகளின் உரிமைகளுக்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் சங்கம் தொடர்ந்து பாடுபடும் என்றும் மீஞ்சூரில் உள்ள அனைத்து வணிகர்களிலும் பேரன்பில் இணைப்பது குறித்தும் புதிய உறுப்பினர் அட்டை உள்ளிட்டவை வழங்குதல் மற்றும் வியாபாரிகளை பாதிக்கும் சாம்பல் லாரிகளை முற்றிலும் தடை செய்யக்கோரி மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வணிகர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதற்கு முன்பாக மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு அலுவலகத்தில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
No comments