Breaking News

தூத்துக்குடியில் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைகள் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சியில், புதிய தார் சாலைகள் அமைத்தல், பேவர்பிளாக் சாலைகள், புதிய பூங்காக்கள், உயர்கோபுர மின்விளக்குள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், மாநகராட்சிக்குபட்ட சண்முகபுரம், ஹோலிகிராஸ் பள்ளியின் பின்புறம் உள்ள பகுதி, சண்முகபுரம் பத்ரகாளியம்மன் கோயில் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள பகுதிகள், சண்முகபுரம் பிராப்பர் தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார்சாலை மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பிரையன்ட்நகர் 11ம் தெரு கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதி, 10வது தெருவின் கிழக்கு தொடர்ச்சி முதல் லெவஞ்சிபுரம் செல்லும் பகுதி, லெவஞ்சிபுரம் 1 மற்றும் 2 ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் தார்சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, முன்னாள் வட்டச் செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான இசக்கிமுத்து, வட்டச் செயலாளர்கள் பொன்ராஜ், சரவணன், சுரேஷ், மாமன்ற உறுப்பினர்கள் பேபி ஏஞ்சலின், சரவணக்குமார், முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் மற்றும் போல்பேட்டை திமுக பிரதிநிதி ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

No comments

Copying is disabled on this page!