சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காந்தி ஜெயந்தியையொட்டி காங்கிரஸ் கட்சியினர் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.
தேசிய விழிப்புணர்வு நடைப்பயணம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் இருந்து சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் துவங்கி வைத்தார். நான்கு ரோடு, காரைக்குடி ரோடு, சன்னதி தெரு, சிங்கம்புணரி சாலை, அக்னி பஜார், பெரிய கடைவீதி, காந்தி சிலை சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, மதுரை ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வழியாக சென்று திருப்பத்தூர் காந்தி மாளிகையில் நடைபயணம் நிறைவடைந்தது.
இதில் சிங்கம்புணரி சாலை, காந்தி சிலை மற்றும் அண்ணா சிலை கட்சி ஆகிய இடங்களில் கட்சி கொடியினை ஏற்றி வைத்தனர். இதில் வட்டார தலைவர் பிரசாந்த், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம் அருணகிரி, சிங்கை தருமன், சிங்கம்புணரி வட்டாரத் தலைவர் வீரமணி, திருப்பத்தூர் நகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகேஷ், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சோனைக்காளை உள்ளிட்ட திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் பேசிய மக்களவை உறுப்பினர் கார்த்திசிதம்பரம், தேர்தல் நேரத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி செயல்படும் என்ற பொய்யான கருத்தை மாற்றி மக்களோடு மக்களாக மக்கள் சேவைக்காக நமது குரல் ஒலிக்க வேண்டும். சுதந்திரத்திற்கு மட்டுமல்லாமல் இந்திய ஒற்றுமைக்காவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சி நமது காங்கிரஸ் கட்சி என்றார்.
No comments