கோவில்பட்டியில் அடிபம்புவுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆழ்குழாய் அடிபம்பினை சரி செய்ய வேண்டும் - சாலையை சீரமைத்து பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி அடிபம்புவுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு குமாரபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பழுதடைந்த ஆழ்குழாய் அடிபம்பினை சரி செய்ய வேண்டும், பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர், பிஆர்எஸ் கார்டன் சாலைப் பகுதியில் குண்டு குளியுமாக உள்ள சாலையை சீரமைத்து பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும், கழிவு நீர் செல்ல வாறுகால் வசதி செய்து தர வேண்டும் என்பதனை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அடிபம்புவுடன் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அளித்தனர்.
No comments