மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பிக்கும் வகையில் தலைமுடியை தானமாக வழங்கிய கல்லூரி மாணவிகள்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பிக்கும் வகையில் தங்களின் தலை முடியை தானமாக வழங்கிய கல்லூரி மாணவிகள் நாட்டு நல பணி திட்டம் கிறிஸ்துவ கல்லூரி சி வி சி மற்றும் வேலூர் சிகைக்கொடை இயக்கத்துடன் இணைந்து மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பிக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது.
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு சின்னமான இளஞ்சிவப்பு நாடா வடிவில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்தில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர், மேலும் இதனைத் தொடர்ந்து சுமார் 200 மாணவிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேர்க்கை சிகை தயாரிக்கப்படுவதற்கு மாணவிகள் தங்களது முடிகளை தானமாக வழங்கி சிகைதானம் செய்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் மேரி ஜோஸ்வின் ராணி, முதல்வர் ஆரோக்கிய ஜெய்சீலி துணை முதல்வர் அமலா வளர்மதி மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் அமுதா காயத்ரி அஸ்வினி தனபாக்கியம் அனுராதா கர்லின் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட தொண்டர்களும் கலந்து கொண்டனர்
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments