ராணிப்பேட்டை உட்கோட்ட சிப்காட் தொழில் பேட்டையில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு அஞ்சலகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி.
ராணிப்பேட்டை சிப்காட் தொழில் பேட்டை அருகிலுள்ள அஞ்சல் அலுவலகம் அருகில் உள்ள இந்திய அஞ்சல் துறை அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இந்த விழாவில் அரக்கோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது மேலும் இதில் அரக்கோணம் அஞ்சல் கோட்டத்தின் தலைமை உதவி கண்காணிப்பாளர் பழனி மற்றும் கோட்டத்தின் கீழ் உள்ள அரக்கோணம் ராணிப்பேட்டை. வாலாஜா ஆற்காடு திமிரி சோளிங்கர் ஆகிய அனைத்து அஞ்சலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தியின் கனவான தூய்மை இந்தியா வினை உருவாக்க பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி சிப்காட் அஞ்சல் அலுவலகத்தில் துவங்கி எம்பிடி ரோடு வழியாக ஜி கே மருத்துவமனை வரை சென்று சிப்காட் தொழில்பேட்டை வளாக ரோடு வழியாக சிப்காட் பேருந்து நிலையம் நிலையத்தினை சுற்றி சிப்காட் அஞ்சலகம் வரை சென்றடைந்தது இவ்விழா ஏற்பாடுகள் அனைத்தும் வாலாஜா உட்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் திருஞானசம்பந்தன் மற்றும் அன்பரசன் சிப்காட் அஞ்சல் அதிகாரி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்
No comments