கிராம பெயர் மாற்றம் தொடர்பாக அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை.
கரூர் அருகே உள்ள கடவூர் தாலுகா கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மத்தகிரி கிராம ஊராட்சியில் உள்ள சக்கிலியப்பட்டி என்ற குக்கிராமத்தின் பெயரை குறிஞ்சி நகர் என பெயர் மாற்றம் செய்து, அப்போதைய கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் (தற்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வருகிறார்) கரூர் மாவட்ட அரசு இதழில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி சிறப்பு வெளியீடு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக, அப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாய மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்த புகார் மனுக்கள் தொடர்பாக, தற்போதைய கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மத்தகிரி கிராம ஊராட்சியில் உள்ள ஒரு குக்கிராமம் குறிஞ்சி நகர் என பெயர் மாற்றம் செய்தது தொடர்பாக கரூர் மாவட்ட அஞ்சலக கண்காணிப்பாளர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட ஊராட்சி செயலாளர், மாவட்ட பதிவாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
No comments