Breaking News

தூத்துக்குடியில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்


தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் நாளை மறுதினம் (18ஆம் தேதி) வரை நீட்டிக்கப்படும் என சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். 

தமிழ்நாடு முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டு திட்ட பயனாளிகள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கட்டணமுமின்றி சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் விடுபட்ட பயனாளிகளுக்கான சிறப்பு காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் முகாம் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கிவைத்து பார்வையிட்டார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை பெறுவதற்கான முகாமிற்கு வருபவர்கள் குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் எடுத்து வந்து காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த முகாம் இன்று முதல் (அக்.16 ஆம் தேதி) மற்றும் நாளை (17ஆம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகளவிலான மக்கள் காப்பீட்டு திட்டத்திற்கு பதிவு செய்ய வந்துள்ளனர். 

அதனால், மேலும் ஒருநாள் (அக்.18ஆம் தேதி) இம்முகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் இதுவரை காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்ய வில்லையெனில் நாளை மறுநாள் (18ஆம் தேதி) வரை நடைபெறும் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இன்று (16ம் தேதி) முதல்நாள் முகாமில் 875 பேர் பங்கேற்றனர். இதில், 310 பேருக்கு உடனடியாக காப்பீடு திட்ட அட்டை பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில், தாசில்தார்கள் முரளிதரன், ஞானராஜ், துணை தாசில்தார்கள் ரமேஷ், சுப்பையா, அந்தோணி ஜெபராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிர்மல்ராஜ், வட்டச் செயலாளர்கள் பாலு (எ) பாலகுருசாமி, செந்தில்குமார், கந்தசாமி, மாமன்ற உறுப்பினர்கள் அதிர்ஷ்டமணி, வைதேகி பலவேசமுத்து, மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, நாகராஜன், அருணாதேவி, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, அண்ணாநகர் பகுதி ஒருங்கிணைப்பாளர் மார்க்கின் ராபர்ட், அண்ணாநகர் பகுதி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் ஜோயல், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல், போல்பேட்டை பகுதி துணைச் செயலாளர் ரேவதி, மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத் மற்றும் மணி, அல்பர்ட், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!