Breaking News

மாணவர்களுக்கு கல்வி கடன் தொகை பெரும் ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

 



புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரை நிலை கழகத்தின் மூலம் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கடன் தொகை பெரும் ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.


புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வர நிலைக் கழகத்தின் மூலம் கல்வி கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல் தொழில்நுட்ப பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் 333 ஆதிதிராவிட மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் ரூ‌.4 கோடி 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதில் முதற்கட்டமாக 40 மாணவ மாணவிகளுக்கு கல்வி கடனாக சுமார் 74 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.


ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சரவணகுமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் உதவித்தொகை பெரும் ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரை நிலை கழகத்தில் மேலாண் இயக்குனர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!