உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பிரியதர்ஷினி நகரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடற்ற ஏழை பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பிரியதர்ஷினி நகர் பகுதியில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு தகுதியின் அடிப்படையில் வீடற்ற ஏழை மக்களுக்கு மாவட்ட தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த ஜீலை மாதம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட 32 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்,துறை அமைச்சர் திருமுருகன், சட்டமன்ற உறுப்பினர் நேரு மற்றும் குடிசை மாற்று வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் சுந்தரராஜ், உதவி பொறியாளர் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments