புதுச்சேரி கல்வித்துறையில் விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 47 நபர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்
புதுச்சேரி, பள்ளிகல்வி துறையின் கீழ் நேரடி நியமனத்திற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 67 விரிவுரையாளர்கள் பதவிக்கு 42 நபர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
அவர்களில் புதுச்சேரியில் 28 நபர்களுக்கும், காரைக்காலில் 3 நபர்களுக்கும், மாகியில் 9 நபர்களுக்கும் மற்றும் ஏனாமில் 2 நபர்களுக்கும் என மொத்தம் 42 நபர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்குபணி ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.
அப்போது,சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கல்வி அமைச்சர் நமச்சிவாயம், கல்வி துறை செயலர் ஜவஹர்,கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments