Breaking News

தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கி இலவச மருத்துவ முகாமை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

 



மத்திய அரசு வீட்டு வசதி மற்றும் நகர் அமைச்சகத்தின் அறிவுறுத்தல் படி தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கி இலவச மருத்துவ முகாமை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.


மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகத்தின் அறிவுருத்தலின் படி மகாத்மா காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக 2017 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2ஆம் தேதிவரை தூய்மையே சேவை எனும் நோக்கோடு, 15 நாட்கள் பொதுமக்கள், துப்புரவு பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


 அதன்படி தன்னார்வளர்கள், பள்ளி/ கல்லூரி மாணவர்கள், தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்போடு நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாத இடங்களை கண்டறிந்து தொடர் துப்புரவு பணிகள் மேற்கொள்ளுதல், பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், துப்புரவு பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்குதல் போன்றவைகள் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதன் ஒரு பகுதியாக தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்குதல் மற்றும் மருத்துவ முகாம் உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவங்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் , உள்ளாட்சிதுறை இயக்குனர் சக்திவேல், சுகாதாரம், குடும்ப நலவழித்துறை இயக்குனர் டாக்டர். செவ்வேல் மற்றும் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் மற்றும் ஸ்வச்சதா கர்ப்ரேஷன் தூய்மை பணியாளர்கள் பங்குபெற்று பயனடைந்தனர்.

No comments

Copying is disabled on this page!