தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி "காந்தி ஜெயந்தி விழாவை" முன்னிட்டு கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அறவழி பரப்புரை நடை பயணம்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மத நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஜனநாயக பாதுகாப்பை வலியுறுத்தியும், பிரிவினைவாதத்தை எதிர்த்தும் கோவில்பட்டியில் அறவழி பரப்புரை நடைப்பயணம் நடைபெற்றது. இந்த அமைதி ஊர்வலத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் அருண்பாண்டியன் தலைமை வகித்தார்.
கோவில்பட்டி காமராஜர் சலை முன்பு தொடங்கிய நடைப்பயணத்தை முன்னாள் மாவட்ட தலைவர் காமராஜர் தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதி வழியாக வந்த நடை பயணம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நிறைவு பெற்றது. இதில் திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments