வள்ளியூரில் ரூ.1.16 லட்சம் மோசடி செய்ததாக வக்கீல் மீது வழக்கு.
வள்ளியூரை சேர்ந்தவர் பிவின்சன் சாலமோன். இவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வக்கீல் தொழில் செய்து வருகிறார். இவர் தற்போது வள்ளியூர் வக்கீல்கள் சங்க செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் தலைமையில் வக்கீல் சங்க நிர்வாகிகள் பணகுடி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கடந்த ஆண்டு வள்ளியூர் வக்கீல்கள் சங்க தலைவராக பணியாற்றிய பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த வக்கீலான லிங்கம் சங்க பணம் ரூ.1.16 லட்சத்தை மோசடி செய்துள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக வள்ளியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அபினேஷ் விசாரணை நடத்தி புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 316-ன் கீழ் வக்கீல் லிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments