குடியாத்தம் ரோட்டரி சங்கம் மற்றும் கே. வி. எஸ். மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய நோய் மருத்துவ முகாம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பாபுரம் ஜி. பி. எம். தெருவில் உள்ள கே. வி. எஸ். மருத்துவமனையில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது தலைமை ரோட்டரி சங்கத்தின் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார் பொது மருத்துவர் நீரிழிவு மற்றும் இருதய நோய் சிகிச்சை மருத்துவர் எஸ். சுகுமார் வரவேற்பு ஆற்றினார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன் கே. எம். ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் எம். ஜி. ராஜேந்திரன் ரோட்டரி சங்கம் முன்னால் ஆளுநர் ஜே. கே. என். பழனி வழக்கறிஞர் பூபதி ஆகியோர் முகாமை துவங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் இருதய நோய் சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர். வினோத் சுகுமார் நோயாளிகளை பரிசோதனை செய்தார் பின்னர் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் செ. கு. வெங்கடேசன் முன்னிலை வகித்தார் இந்த முகாமில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தார்கள்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments