கோவில்பட்டியில் குழந்தைகளுக்கான இருதய மருத்துவ இலவச ஆலோசனை முகாம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் மற்றும் திருநெல்வேலி ராயல் மருத்துவமனை சார்பில் கோவில்பட்டி ஏ.வி மேல்நிலைப்பள்ளியில் இலவச குழந்தைகள் இருதய மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமில் பிறவி இருதய குறைபாடு உள்ள குழந்தைகள், இருதய அடைப்பு, மூச்சுத் திணறல் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர்.
சென்னை அப்போலோ மருத்துவமனை இருதய நிபுணர் மருத்துவர் ராம் கிஷோர் முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். குழந்தைகள் நல மருத்துவர் துரை பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்க தலைவர் தாமோதரக்கண்ணன், செயலாளர் ராஜமாணிக்கம், விநாயகர் ரமேஷ், முத்துச்செல்வன், MSSVபாபு, பழனிக்குமார், ரெட் கிராஸ் மோகன்ராஜ் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments