உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் கிராமத்தில் தேரோட்டம்
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் பிரமோற்சவம் நடைபெற்று வருவது வழக்கம் அது போல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவவிழா கடந்த 02ஆம் தேதி தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிரசன்ன வெங்கடேச பெருமாள் தங்க கருட வாகனத்தில் கடந்த 07ஆம் தேதி திருப்பல்லக்கில் உற்சவம் வந்து பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் இறுதி நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது, அப்பொழுது பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 20 அடி உயர திருத்தேரில் பெருமாள் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து சிறப்பு பூஜைக்கு பின்பு திரு தேரோட்டம் நடைபெற்றது அப்பொழுது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் வழங்க தேரை வடம் பிடித்து இழுத்து வேண்டுதலை நிறைவேற்றினர், விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
No comments