அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் மழை நீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழைநீர் எளிதாக வெளியேறும் வகையில் நடவடிக்கை.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் குடியிருப்புகளை மழை நீர் பாதிக்காமல் வெளியேறும் வகையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் வந்தன. இதனையடுத்து துணை ஆட்சியர் ராமன், சிறப்பு வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் மழைநீர் செல்லும் கால்வாயினை ஆய்வு செய்தனர். வல்லூர் அனல் மின் நிலையம், பாரத் பெட்ரோலிய நிறுவனம், சுவாரி சிமெண்ட் நிறுவனம் போன்ற தொழில் நிறுவனங்கள் வழியே மழை நீர் கால்வாய் எண்ணூர் கடலில் சென்று கலக்கும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டன.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் ஊராட்சியில் மேற்கொண்டுள்ள வடகிழக்கு பருவமழை பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். முன்னதாக அத்திப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், துணைத்தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல், மீஞ்சூர் வருவாய் ஆய்வாளர் புருஷோத்தமன், கிராம நிர்வாக அலுவலர்கள் ரஞ்சித் குமார், சீனிவாசன், ஊராட்சி செயலாளர் ஆனந்தன், நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் மோகன்தாஸ், வார்டு உறுப்பினர்கள் கோமதிநாயகம், அருண் ஜோதி, துளசிபாய் சுந்தரம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments