உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் பங்கில் பட்டாசு வெடித்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் தட்டிக்கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்களை கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவை சேர்ந்தவர் தில்லைவாசன் இவர் உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கம் போல் திருமலைவாசன் வேலை செய்து கொண்டிருந்த பொழுது ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் அவர்கள் கையில் வைத்திருந்த பூண்டு வெடியை பெட்ரோல் பங்கில் போட்டு மது போதையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்து சென்ற திருமலைவாசன் இங்கே பங்கில் பட்டாசு வெடித்தால் விபத்துகள் ஏற்படும் என்ற அச்சத்தில் அவர்களிடம் இங்கே பட்டாசு வெடிக்க கூடாது என்று சொல்லிய பொழுது மூன்று இளைஞர்களும் சேர்ந்து திருமலைவாசனை கடுமையாக தாக்கினர் இது தொடர்பான சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
No comments