தருமபுரி அருகே தொடர் விபத்தால் சாலைக்கு கோடு போட்ட அதிகாரிகள்.
பாலக்கோடு அடுத்த கோடியூர் நெடுஞ்சாலையில் முன்னால் நின்று கொண்டிருந்த அரசு நகர பேருந்தின் மீது மோதாமல் இருக்க கோவிந்தராஜ் பிரேக் போட்டுள்ளார். ஏற்கனவே மழை பெய்து கொண்டிருந்த காரணத்தாலும், சாலை வழுவழுப்பாக இருந்ததினாலும், திடீர் என பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் ஒரு சுற்று சுற்றி கவிழ்ந்து விபத்திற்க்குள்ளானது.
இதே பகுதியில் 6 மாதத்திற்க்குள் 4 லாரி 3 பேருந்து என 7 விபத்துக்கள் நடந்துள்ளன, கடந்த 2 மாதத்திற்க்கு முன் ஜூலை 15ம் தேதி இதே பகுதியில் தனியார் பேருந்தும் லாரியும் மோதி 110 பேர் படுகாயமடைந்தனர்.
திம்மம்பட்டி, சர்க்கரை ஆலை, கோடியூர், மாதம்பட்டி வெள்ளி சந்தை சூடப்பட்டி வரை 15 கிலோ மீட்டர் தூரம் வரை சாலையானது கடந்த 15 வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் வழுவழுப்பாகி உள்ளதால், சிறிய மழைக்கு கூட பெரிய விபத்து ஏற்பட்டு வருகிறது. விபத்து ஏற்படும்போது மட்டும் பெயரளவிற்க்கு ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர் சாந்தி, சாலையை சீர் செய்யாமல் சாலையின் குறுக்கே கோடு மட்டும் போட்டுள்ளார்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி உள்ளது. பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments