Breaking News

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்.


ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே பொதுத்துறை நிறுவனமான பாரத் மிகுமின் நிறுவனத்தின் குடியிருப்பு பகுதியில் டி ஏ வி சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு சுமார் 2300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்நிலையில் இன்று ஈமெயில் வாயிலாக பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது மிரட்டல் குறித்து தகவல் அறிந்த பள்ளி முதல்வர் வீர முருகன் உடனடியாக சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் மற்றும் பெல் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திருமால் தலைமையில் ஆன போலீசார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பள்ளிக்கு உடனடியாக வந்து மிரட்டல் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து மாணவ மாணவிகளை உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேற்றி அனுப்பி வைத்தனர், மேலும் உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு துறையினர், வெடிகுண்டு கண்டறியும் இயந்திரம் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் விசாரணையில் அஸ்விதா கருணாநிதி என்ற இமெயில் வாயிலாக இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகத்தில் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பள்ளி வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments

Copying is disabled on this page!