Breaking News

புதுச்சேரி முருங்கப்பாக்கம் கைவினை கிராமம் அருகே உள்ள ஆற்றின் கரையோரம் இறந்து கிடந்த குழந்தை சடலம் குறித்து அரியாங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 



புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் முருங்கம்பாக்கம் பகுதியில் கலை மற்றும் கைவினை கிராமம் உள்ளது. இதன் பின்புறம் தனியார் பங்களிப்பில் படகு குழாம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று வழக்கம் போல படங்களை இயக்க ஊழயர்கள் வந்தனர். அப்போது அந்த ஆற்றின் ஓரம் ஒரு குழந்தையின் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீசார் திறந்து வந்து குழந்தைகள் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகாத உறவில் அந்த குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை கொன்று ஆற்றில்

 வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!