வாகனசோதனையில் போலீசில் பிடிபட்ட இருசக்கர வாகன திருடன்.
இராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் அவர்களின் உத்தரவின் பேரில் இராணிப்பேட்டை உட்கோட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் திருமால் உத்தரவின் படி இராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் சசிக்குமார் தலைமயிைல் இராணிப்பேட்டை உதவி ஆய்வாளர்கள் பாஸ்கரன், இளவரசன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாஸ்கர், சுரேஷ்பாபு தலைமைக்காவலர் சரவணன், முதல்நிலை காவலர் பாலாஜி, திரு.குமரன், சிலம்பரசன், காவலர் சீனிவாசன் ஆகியோர்கள் இராணிப்பேட்டை KH மேம்பாலம் அருகே குற்ற தடுப்பு சம்பந்தமாக வாகனத்தணிக்கை செய்து கொண்டு இருந்த போது தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஒட்டி வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்ய அவர் இராணிப்பேட்டை, சிப்காட், வாலாஜா பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த வி.சி.மோட்டுரை சேர்ந்த புருஷோத்தமன் (எ) கொக்கு என்பது தெரியவந்தது, அவரை மடக்கிப்பிடித்த போலீசார் அவரிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் பரிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டது.
No comments