புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை தொடர்ந்து வீட்டிலேயே மதுபானம் விற்பனை செய்வதற்கு "பார் ஹவுஸ்" திட்டம்..!
புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை தொடர்ந்து வீட்டிலேயே மதுபானம் விற்பனை செய்வதற்கு "பார் ஹவுஸ்" என்ற புதிய திட்டத்தை முதல்வர் ரங்கசாமி கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி,
புதுச்சேரியில் புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகள் வழங்க அரசு கொள்கை முடிவு எடுத்தது. இந்த முடிவுக்கு அப்போதைய கவர்னர் தமிழிசையிடம் ஒப்புதல் பெறாமல் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக ரூ.60 கோடி வரை லஞ்சமாக பெறப்பட்டது.
புதுவையில் ஏற்கனவே ரெஸ்டோ பார்களால் கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சினையும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி விதவிதமாக சிந்தனை செய்கிறார். ஹவுஸ் பார் என்ற திட்டத்தை கொண்டுவர அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த திட்டத்தின் கீழ் வீடுகளிலேயே பார்கள் அமைத்து, மது விற்பனை செய்யலாம்.
புதுச்சேரியை மதுச்சேரியாக மாற்றிய முதலமைச்சரை மக்கள் தூக்கியெறியும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றார்.
No comments