ஹரியானா மாநிலத்தில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளதையொட்டி, ஈரோட்டில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் 89 தொகுதியில் பாஜக தனித்து போட்டியிட்டது. அதேபோல இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் 89 இடங்களில் போட்டியிட்டது.
இதனையடுத்து இன்று காலை முதல் வாக்குபதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், பாஜக 48 இடங்களை பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளதால், அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒன்று திரண்ட பாஜக வினர் சாலையின் நடுவில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
No comments