பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்றது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவின்பேரில் தமிழ்நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை பொறுப்பாளர்களுக்கும், புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் மற்றும் பயிலரங்கு முக்காணியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்து பேசினார்.
கூட்டத்தில், மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவவிநாயகம், தீவிர உறுப்பினர் சேர்க்கை மாவட்ட பொறுப்பாளர் ராஜகண்ணன், நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் விவேகம் ரமேஷ், மாவட்ட உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 2 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை புதிகாக சேர்க்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments