நான்கு தலைமுறை தாண்டியும் எல்லோர் மனதையும் கவர்ந்துள்ள 200க்கும் மேலான ஒரே மாடல் மோட்டார் சைக்கிள்களுக்கு ஆயுதபூஜை. பூஜைக்கு பின் அணிவகுத்து சென்றது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
காரைக்காலி கடந்த காலங்களில் விற்பனை வரி குறைவாக இருந்ததால் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் காரைக்காலில் இருந்து வாங்கி சென்றுள்ளனர். இந்த நிலையில் 40 ஆண்டுகள் பழமையான இந்த வாகனத்தை பழுது நீக்கி புத்தம் புதிதாக வடிவமைக்கும் நிறுவனத்தை காரைக்காலில் பால்ராஜ் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகின்றார். ஒவ்வொரு ஆயுத பூஜையன்றும் இவரது நிறுவனத்திற்கு பழுது பார்க்க வரும் காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து வரும் யமஹா வாகன ஓட்டிகள் மட்டும் இன்று ஒரு நாள் ஒன்று கூடி இந்த வாகனத்தில் மேலும் எந்தவகையான பழமை மாறாத மாற்றத்தை செய்யலாம் என்பது குறித்து விவாதிப்பார்கள் பின்னர் அனைவரும் ஒன்றாக பூஜை செய்வது வழக்கம்.
அதைப்போல் இந்தாண்டும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட ஒரே மாதிரியான யமஹா மோட்டார் சைக்கிள்களை கொண்டு வந்து அதற்கு பூஜை செய்தனர். பின்னர் 200க்கும் மேற்பட்ட வாகனங்களும் அணிவகுத்தபடி காரைக்காலின் அனைத்து சாலைகளிலும் ஊர்வலமாக சென்றார்கள். பழமையான வாகனத்திற்கு இன்னும் மவுசு இருப்பதை உணர்த்தும் விதமாக இந்த வாகன அணிவகுப்பு இருந்தது.
No comments