Breaking News

தேசப்பிதா மகாத்மா காந்தி அடிகளின் 155 வது பிறந்தநாள் முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பாக விழிப்புணர்வு நடைப்பயணம்.


தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின்  155 வது பிறந்தநாள் பெருந்தலைவர் காமராஜ் 49 வது நினைவு நாள் மற்றும் முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி  120 வது பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மாவட்டம் கமிட்டி மாவட்டம் சார்பில் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி பள்ளிகொண்ட காந்தி சிலை முதல் பேருந்து நிலையம் வரை மற்றும் அணைக்கட்டு சந்தை மேடு அம்பேத்கர் சிலை வரை விழிப்புணர் நடை பயணம் நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் G. சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி ஜலந்தர் பள்ளிகொண்டா பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அக்பர் பாஷா வேலூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் நித்தியானந்தம் மாவட்ட பொதுச் செயலாளர் ஆகியோர்களின் முன்னிலையிலும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர் பாதயாத்திரையின் துவக்கத்தில் பள்ளிகொண்டா பேரூர் இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிக்கந்தர் வரவேற்புரையை துவங்கியும் பள்ளிகொண்டா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து புதிதாக அமைக்கப்பட்ட  3 கொடி கம்பத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கொடியேற்றி தேசிய விழிப்புணர்வு நடைப்பயணம் துவங்கப்பட்டது.

இந்த நடைபயணத்தின் முன்னாள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மகாத்மா காந்தி அடிகளின் திரு உருவப்படம் மேளத்தளத்துடன் எடுத்துச் செல்லப்பட்டது, இந்நிகழ்விற்கு மாநில பேச்சாளர் நாட்டம் கார் அப்துல் அக்பர் சிறப்புரையையும் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் சங்கர் தனசேகர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயன்( குடியாத்தம்) முஜமில் அஹ்மத் ( பேர்ணாம்பட்டு ) மாவட்ட நிர்வாகிகள் விஜயேந்திரன் முனிசாமி தேவகி ராணி ராஜேந்திரன் பாரத் நவீன் குமார் சரவணன் MD. ராகீப் உவைஸ் அகமத் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய் பாபு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம் மகளிர் காங்கிரஸ் மகளிர் தலைவர் கோமதி குமரேசன் மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் ராஜசேகரன் மாவட்ட RGPRS தலைவர் ஆனந்த வேல் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் நவாலி தாஹீத் மாவட்டக் கலை பிரிவு தலைவர் காத்தவராயன் மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் ஆடிட்டர் ஹரிபாபு மாநில எஸ்ஸி பிரிவு செயலாளர் சுப்பிரமணி பள்ளிகொண்ட போரூர் காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் பன்னீர்செல்வம் மகளிர் காங்கிரஸ் தலைவர் ராதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

- வேலூர் மாவட்ட செய்தியாளர்  எஸ். விஜயகுமார்

No comments

Copying is disabled on this page!