Breaking News

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருமுல்லவாசலில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.

 



மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருமுல்லவாசலில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் சீர்காழி போக்குவரத்து காவல்துறை சார்பாக  சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திருமுல்லைவாயல் பகுதியில் நடைபெற்றது. இப்பேரணியில் சாலை விதிகளை மதிப்போம், செல்போனை பேசிக்கொண்டு வாகனத்தை , தலைகவசம் கட்டாயம் அணிய வேண்டும், குடித்துவிட்டு  வாகனம் ஓட்டக்கூடாது போன்ற பதாகைகளை ஏந்தி கொண்டு மாணவர்கள் பேரணியாக ஊர்வலம் வந்தார்கள். 

மேலும் மாணவர்களிடம் சீர்காழி போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர்  வேல்முருகன் பேசுகையில்..... பள்ளிப் பருவம் என்பது சிறந்த பருவம் இந்த பருவத்தில் மாணவர்கள் தங்களுடைய பள்ளிக்கும் பெற்றோருக்கு, சமூகத்திற்கும் சிறந்த மாணவராக உருவெடுத்து வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்றும், வாகனங்களை ஓட்டும்போது ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும், வாகனங்களில் செல்லும் பொழுது மெதுவாக செல்ல வேண்டும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டக்கூடாது, 18 வயதிற்கு உட்பட்டவர்கள் வாகனத்தை ஓட்டக்கூடாது, உங்களுடைய ஆசிரியர்களை மதிக்க வேண்டும், இளமைப் பருவத்தை ஆக்கபூர்வமான விஷயத்திற்கு பயன்படுத்தி IAS,IPS போன்ற பெரும் பதவிகளை வகிக்க இந்த பருவத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும், போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, செல்போன் பயன்படுத்துவதை மாணவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்,  செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடக்கூடாது இதனால் கண்கள் பாழாகும், ரேஸ் பைக்குகளை பயன்படுத்தக் கூடாது, அதிக ஒலி எடுப்பும் வாகனங்களை பயன்படுத்தக் கூடாது, பெரியோர்களையும், பெற்றோர்களையும் மதிக்க வேண்டும், உடல் திறனை வலுப்படுத்த கட்டாயம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும், இதனால் உடல் மட்டுமல்லாது மனமும் வலுபெறும் போன்ற கருத்துக்களை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களிடையே  கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்,GVN கணேஷ் மற்றும் சீர்காழி போக்குவரத்து காவலர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

No comments

Copying is disabled on this page!