சீர்காழியில் 100 சதவீதம் தேர்தலில் வாக்களிப்பது அவசியம் குறித்து பள்ளி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு கட்டுரை போட்டி..!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி அதனை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு கட்டுரைபோட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும், 100% தேர்தலில் வாக்கு வாக்களிக்க வேண்டும்,மாணவர் மாணவிகள் தங்களது பெற்றோர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதினர்.
மேலும் இப்போட்டியில் வெற்றி பெறுபவர் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகரசிங், தேர்தல் வட்டாட்சியர் இளவரசன், ஒருங்கிணைப்பாளர் லயன். சக்திவீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments