புதுச்சேரி கிறிஸ்ட் இண்டர்நேஷ்னல் பள்ளியில் நடைபெற்ற போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி கிறிஸ்ட் இண்டர்நேஷ்னல் பள்ளியில் நடைபெற்ற போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் திரிபாதி கலந்து கொண்டு போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பான விளக்கங்களை மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.
புதுச்சேரி தொண்டமாநத்தம் பகுதியில் உள்ள கிறிஸ்ட் இண்டர்நேஷனல் பள்ளியில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி முதல்வர் தலைமையில் நடைபெற்ற விழாவில், எஸ்பி மோகன் குமார், இன்ஸ்பெக்டர்கள் கோகுல கிருஷ்ணன்,செந்தில் கணேஷ்,உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து காவல்துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன் திரிபாதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விளக்கங்களை மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.
No comments