உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் தள்ளுவண்டிகளை நடுரோட்டில் நிறுத்தி பெண் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தள்ளு வண்டிகளில் பூக்கடை, பழக்கடை, கூழ் கடை மற்றும் தின்பண்டங்கள் கடை வைத்து நடத்தி வருகின்றனர் இதனால் பகல் நேரங்களில் பஸ் நிலையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் சாலையோரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் கடை வைக்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கியதோடு கயிறு கட்டி உள்ளனர் ஆனால் அதையும் மீறி ஒரு சிலர் சாலையோரம் தள்ளு வண்டிகளில் கடை வைத்திருந்தனர் அவர்களை அப்புறப்படுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் ஈடுபட்ட பொழுது சாலையோரம் தள்ளு வண்டிகளில் கடை வைத்திருந்த சில பெண்கள் திடீரென ஆத்திரமடைந்து தள்ளு வண்டிகளை நடுரோட்டில் நிறுத்திவிட்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அதனால் பஸ் நிலையம் பகுதியில் சாலையோரம் தள்ளு வண்டிகளில் கடை வைக்க போலீசார் அனுமதிக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்கள் இது பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர் அப்பொழுது போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் சாலையில் நிறுத்தப்பட்ட தள்ளு வண்டிகளை அப்புறப்படுத்தும் பொழுது போலீசாருக்கும் பெண் வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது ஒரு வழியாக பின்னர் போலீசார் தள்ளு வண்டியை அகற்றினார் அப்போது உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது பெண்கள் போலீசாரின் காலில் விழுந்து தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் சாலையோரம் கடை வைக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டு கதறி அழுதனர் இதைத் தொடர்ந்து மறியல் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் கடை வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினர். இதனால் பெண் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.
No comments