தேசிய ஹாக்கி அணிக்காக விளையாட்டிய வீரர்களுக்கு பாராட்டு விழா.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்டிகரில் நடந்து முடிந்த 14 வது ஹாக்கி இந்தியாவின் சப்ஜூனியர் தேசிய ஆண்கள் ஹாக்கி போட்டியில் தமிழக அணிக்காக கோவில்பட்டி வீரர்கள் முத்து ராஜேஷ், சுகுமார், கௌதம், சுந்தர் அஜித் (அணித்தலைவர்), கவி சக்தி போஸ், சுபாஷ், முகில் கிருஷ்ணா ஆகியோர் விளையாடி கோவில்பட்டிக்கு பெருமை சேர்த்தனர் தேசியப் போட்டியில் கலந்து கொண்ட கோவில்பட்டி வீரர்களை கோவில்பட்டி வெங்கடாசலம் ஏஜென்சி எல்எல்பி சேல்ஸ் மேனேஜர் பாலா அமுதன் மற்றும் வெங்கடாசலம் ஏஜென்சிஸ் எல்எல்பி பங்குதாரர்கள் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் அஸ்வின் ஹக்கிய யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன் அருமை நாயகம் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி பொருளாளர் காளிமுத்து பாண்டி ராஜா கலந்துகொண்டு வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெங்கடாசலம் ஏஜென்சி எல்எல்பி பங்குதாரர்கள் சார்பாக நினைவுப் பரிசு வழங்கி வீரர்களை பாராட்டி மேலும் இந்திய ஹாக்கி அணி பயிற்சி முகாமுக்கு செல்வதற்கு வாழ்த்துக்கள் கூறினர் விழாவில் வெங்கடாசலம் ஏஜென்சிஸ் அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
No comments