Breaking News

திருமுல்லைவாசல் என்.எஸ்.எஸ் முகாமில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

 




மயிலாடுதுறை வருவாய் மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, என் எஸ் எஸ் அமைப்பின் சார்பில் ஏழு நாள் சிறப்பு முகாமில் தற்போதைய சமுதாயத்தின் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி ஒன்றினை வளாகத்தில் இருந்து புறப்பட்டு கடைவீதி வழியாக கடற்கரை கிராமங்கள் வரை பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இப்பேரணியில் 30க்கும் மேற்பட்ட என் எஸ் எஸ் மாணவர்களும், ஊர் பெரியோர்களும் மற்றும் அலுவலர்களும் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியானது திருமுல்லை வாசல் ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் ஜி. வி. என். கணேஷ் தலைமை ஏற்க, பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சுரேஷ் முன்னிலையில், சீர்காழி, ச.மு.இந்து மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியரும், முன்னாள் என் எஸ் எஸ் அதிகாரியுமான எஸ். முரளிதரன் துவக்கி வைத்தார், நிகழ்வில் பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர் யூ. செந்தில்குமார், எழுத்தர் ஆர். செல்வராஜ், உதவியாளர் எஸ். சிங்காரவேலன், தன்னார்வலர் கலையரசன். ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை மயிலாடுதுறை கல்வி மாவட்ட கல்வி அலுவலர்( பொ). என். தக்ஷிணாமூர்த்தி, மயிலாடுதுறை வருவாய் மாவட்ட என். எஸ். எஸ் தொடர்பு அலுவலர் எம். முத்துக்குமரசாமி ஆகியோர் பாராட்டினார்கள் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரும், என் எஸ் எஸ் திட்ட அலுவலருமான தி. இராசேந்திரன் நன்றி கூறினார்.

No comments

Copying is disabled on this page!