உளுந்தூர்பேட்டை சிவாலயா பள்ளியில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு விழிப்புணர் பேரணி நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் சிவாலயா பள்ளி நிர்வாகத்தின் சார்பில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து மரம் வளர்ப்பது குறித்தும் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியும் பதாகைகளை ஏந்தி கடைவீதி பேருந்து நிலையம் வரை ஊர்வலம் ஆகச் சென்றனர்.
ஊர்வலத்தை உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் குமரேசன் தலைமை ஏற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் முருகன், வினோதினி சிவப்பிரகாசம், பள்ளியின் முதல்வர் வசந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.... நிறைவாக உளுந்தூர்பேட்டையில் உள்ள அறிவு சார் மையத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அங்குள்ள புத்தகங்களை வாசிக்க வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது.
No comments