கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை வேல்நகரை சேர்ந்தவர் ராஜ கணேஷ்(40). புதுவை கரசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி விஜயா என்கிற மனைவியும் பிள்ளைகளும் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் புதுச்சேரி கரசூரில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்தினருடன் தங்கி இருந்தார். இதனிடையே ராஜ கணேஷ் தனியாக அப்பள கம்பெனி திறக்க திட்டமிட்டு உறவினர்களிடம் கடன் வாங்கியுள்ளார். இதனிடையே கடன் கொடுத்த உறவினர்கள் அவரிடம் கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த அவரது மனைவி அவரிடம் தகராறு செய்த நிலையில் கோபித்துக் கொண்ட ராஜ கணேஷ் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து நேராக பெட்ரோலை வாங்கிக் கொண்டு அங்குள்ள ஏரிக்கரையின் அருகே ஆலமரத்தின் கீழ் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தனது தலையில் பெட்ரோல் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். வலி தாங்க முடியாமல் அலறியது கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசார் உதவியுடன் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து சேதரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments