Breaking News

அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் இறகு பந்து போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதலிடம்.


அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் இறகுப் பந்து போட்டியானது இராமநாதபுரம் சையது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியால், S D A T சேதுபதி உள் விளையாட்டு அரங்கில் இரண்டு நாட்களாக  நடத்தப்பெற்றது. இப்போட்டியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி ஆடவர் இறகுப்பந்து அணி முதல் இடத்தை பெற்றது. 

மேலும் அழகப்பா பல்கலைக்கழக ஆடவர் இறகுப்பந்து அணிக்கு அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அகமத் யாசின், மாதேஸ்வரன், சேக் முஃபின் ஆகிய மூன்று மாணவர்களும் இம்மாத இறுதியில் சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் இறகு பந்து போட்டியில்  அழகப்பா பல்கலைக்கழக அணியின் சார்பாக பங்கேற்க உள்ளனர். 

இந்த மாணவர்களை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, உடற்கல்வி இயக்குநர் முனைவர் அசோக்குமார், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். 

No comments

Copying is disabled on this page!