மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் செயல்படும் இனிப்பகங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளி விற்பனை கடந்த ஒரு வாரமாக சூடு பிடித்துள்ளது. குறிப்பாக தீபாவளி பண்டிகைக்காக பலகாரங்கள் மற்றும் இனிப்பு வகைகளை வாங்குவதற்காக பொதுமக்கள் ஏராளமானவர் கடைவீதிக்கு வந்து செல்லும் நிலையில், மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் செயல்படும் இனிப்பகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில், நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இனிப்பகங்களில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பலகாரங்கள், இனிப்பு வகைகள், கேக் வகைகள் ஆகியவற்றை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
No comments