Breaking News

மயிலாடுதுறை மாவட்ட சுற்று வட்டார பகுதி வடிகால் ஆறு மற்றும் கிளை வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்..

 


மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் வரை சம்பா சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தற்போது இந்த ஆண்டு தற்போது வரை 1 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் வரை சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறந்து கடையமடை வரை முழுமையாக தண்ணீர் சேராத நிலையில் மோட்டார் வசதி கொண்ட விவசாயிகள் நடவு சாகுபடியும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் நேரடி விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் மேட்டூர் தண்ணீர் கிடைக்காத நிலையில் மழையை நம்பி விவசாயிகள் ஒருபோக சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் கனமழையால் 20,000 ஏக்கர் முதல் 50,000 ஏக்கர் வரை சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டு தண்ணீரில் மூழ்கி வீணாகி வருகிறது. இப்படி ஆண்டுதோறும் சம்பா சாகுபடி பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக வடிகால்களை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையும் ஒன்றாக உள்ளது. சீர்காழி அருகே திருநகரி வாய்க்கால், திருவாலி ஏரி வடிகால் ஆறு, தரங்கம்பாடி மகிமலை ஆறு, மற்றும் மாவட்டத்தின் பிரதான பாசனம் மற்றும் வடிகாலான காவிரி ஆறு என பல்வேறு வடிகால் ஆறுகள் மற்றும் கிளை வாய்க்கால்களை ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளது. இந்த ஆண்டும் பெரும்பாலான விவசாயிகள் மழையை நம்பி நேரடி விதைப்பை செய்துள்ள நிலையில் வடிகால்களில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடியால் மழை நீர் வடிவதில் தடை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்த பின்னர் வடிகால்கள் வழியே வெளியேற்றப்படும் மழைநீர் பிரதான வடிகால் ஆறுகள் வழியே சென்று அங்கிருந்து கதவனை மூலம் கடலுக்கு செல்லும் ஆனால் தற்பொழுது ஆகாயத்தாமரை செடிகள் முழுவதும் சூழ்ந்துள்ளதால் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் ஆகாயத்தாமரை செடிகள் கதவணைகளை முழுவதும் அடைத்து விடுவதால் தண்ணீர் வடிவதில் காலதாமதம் ஏற்பட்டு ஒவ்வொரு ஆண்டும் சம்பா சாகுபடி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.தற்போதைய சூழலில் ஓர் இரு நாள் பெய்யும் மழையில் கூட தண்ணீர் வடிவதில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில் திருக்கடையூர் சேர்ந்த விவசாயி இராமமூர்த்தி கூறும் பொழுது : தொடர் கனமழை ஏற்பட்டால் இந்த ஆண்டும் சம்பா சாகுபடி பெரும் பாதிப்பை சந்திக்கும் என கவலை தெரிவிக்கும் விவசாயி உடனடியாக வடிகால் ஆறு மற்றும் கிளை வாய்க்கால்களில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் கடைமடை பகுதியாக உள்ள தரங்கம்பாடி தாலுக்கா மகிமலையாறு உள்ளிட்ட வடிகால் ஆறுகளில் முழுமையாக ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட மாவட்டம் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Copying is disabled on this page!