30 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்பட்ட பாசன வாய்க்கால் விவசாயிகள் பாராட்டு..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 30 ஆண்டுக்குப் பிறகு தூர்வாரப்பட்ட பாசன வாய்க்கால் நீர்வள ஆதாரத்துறையினர், சட்டப்பேரவை உறுப்பினருக்கு விவசாயிகள் புதன்கிழமை நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர் சீர்காழி, நெப்பத்தார் செல்லும் வாய்க்காலில் இருந்து திருநகரி கிராம விவசாயத்திற்கு பிரித்து கொடுக்க வேண்டிய பாசனநீர் வாய்க்கால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படவில்லையெனவும் அதனால் 300 க்கும் மேற்பட்ட ஏக்கர் அடித்தட்டு மக்களின் விவசாய நிலங்கள் சாகுபடி செய்யமுடியாமல் தவிப்பதாகவும் திருநகரி கிராமத்து இளைஞர்கள்,அக்ஸ்செப்ட் அமைப்பின் மாநில தலைவர் ஜெக. சண்முகமத்திடம் தெரிவித்தனர். தொடர்ந்து சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வத்திடம் நிலைமையினை எடுத்துரைத்தனர். அவர் உடன் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார செயற்பொறியாளருக்கு மேற்படி வாய்க்காலை உடனடியாக தூர் வாரிட கேட்டுக் கொண்டார். அதன்படி செயற் பொறியாளர் மாரிமுத்து ,சீர்காழி துணைக் கோட்டத்தைச் சேர்ந்த உதவி பொறியாளர் சேதுபதியிடம் கால்வாயை உடன் தூர் வாரிட உத்தரவு பிறப்பித்தார் . இதனையடுத்து 6 கி மீ நீளமுள்ள வாய்க்காலை தூர் வாரிய தோடு நீரைப் பகிர்ந்தளிக்கும் விதமாக மடைமாற்றியும் கட்டி கொடுத்துள்ளனர் . இந்த வாய்க்கால் வெட்டி முடிக்கவும் வாய்க்காலில் நீர் வரவும் தருணம் சரியாக அமைய ,சுமார் 100 ஏக்கருக்கும் மேல் விவசாயப் பணி தொடங்கியது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், இளைஞர்கள் நீர் வள ஆதாரத்துறையினர். சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம், உதவிப் பொறியாளர் சேதுபதி, பாசன உதவியாளர் ஜெயசீலன் ஆகியோருக்கு அக்ஸ்செப்ட் அமைப்பின் மாநிலத் தலைவருடன் சென்று மாலையும் சால்வையும் அணிவித்து நன்றியை தெரிவித்தனர் . அப்போது அருமையப்பன் , இராஜா, இராஜேஷ் உடனிருந்தனர்.
Post Comment
No comments