Breaking News

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டம்..

 


காரைக்கால் மாவட்டத்தில் வருகின்ற வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் PRN_திருமுருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் திருநகரில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.D.மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்றது...


இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக JCB இயந்திரம், HEAVY WATER SUCTION மின்மோட்டார் தயார் நிலையில் வைத்திருக்கும் படி அறிவுரை வழங்கினார்கள். மேலும் மழைக்காலங்களில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் உணவு தட்டுப்பாடு இன்றி வழங்கவும் அறிவுறுத்தினார்கள்.


மேலும் இக்கூட்டத்தில் காரைக்கால் பொதுப்பணித்துறை, காரைக்கால் நகராட்சி, கல்வித்துறை, பேரிடர் மீட்புக் குழு, காவல்துறை, தீயணைப்பு துறை, மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்..

No comments

Copying is disabled on this page!