உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து 4 கார்கள் மோதி விபத்து.
பெரம்பலூர் மாவட்டம் சிறு குடல் கிராமத்தை சேர்ந்த காமராஜ் தனது குடும்பத்துடன் சொந்த வேலைக்காக சென்னை சென்று விட்டு மீண்டும் சொந்த ஊரான பெரம்பலூருக்கு வந்து கொண்டிருந்த போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை அஜீஸ் நகர் ரவுண்டானா பகுதியில் எதிர்பாராத விதமாக முன்னாடி சென்ற கார் பிரேக் பிடித்ததால் பின் தொடர்ந்து வந்த கார் அதிவேகமாக மோதியதால் அடுத்தடுத்த நான்கு கார்கள் மோதி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலத்த காயம் ஏற்பட்டு மூன்று பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மற்ற மூன்று கார்களில் வந்த நபர்கள் லேசான காயம் ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விபத்து ஏற்பட்ட கார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர் விபத்தைக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments