கோவில்பட்டி அருகே தனியார் பள்ளி வாகனம் சாலையின் அருகில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 2 மாணவர்கள் காயம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி வாகனம் இன்று மாலையில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு ஆவல் நத்தம் கிராமத்திற்கு சென்றது. வாகனத்தில் 11 மாணவ மாணவிகள் இருந்துள்ளனர். வாகனத்தை அருணாச்சலம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். ஆவல்நத்தம் கிராமம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டர் முந்த முயன்ற போது திடீரென பள்ளி வாகனம் நிலை தடுமாறி சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர் விக்னேஷ் , ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி பேபி ஷாலினி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments