புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் பிறந்த நாள். காரைக்காலில் காங்கிரஸ் சார்பில் கொண்டாட்டம்.
காரைக்கால் தெற்கு வட்டார காங்கிரஸ் முஜிப் ரகுமான் ஏற்பாட்டில் காரைக்கால் காமராஜர் சாலையிலுள்ள USPIS முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் காரைக்கால் ஏழை மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்தும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதோடு, பெண்களுக்கு சேலை வழங்கப்பட்து. காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வேட்டி-சேலைகள் வழங்கப்பட்து.
அதனைத் தொடர்ந்து காரைக்கால் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித் ஏற்பாட்டில் தலத்தெரு வள்ளியம்மை நகரில் அமைந்துள்ள தனியார் MERCY பள்ளியில் மாணவர்களுக்கு மழைக்காலத்தை கருத்தில் கொண்டு குடை, மற்றும் நோட்டு, பேனா வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் ஆர்.பி.சந்திரமோகன், மாநில துணைத்தலைவர் பஷீர், மாவட்ட மகிளாகாங்கிரஸ் தலைவி நிர்மலா, வட்டார தலைவர்கள் மாறன், சுப்பையன், முரளி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
No comments