கோவில்பட்டி, கயத்தாறு கழுகுமலை, எட்டயபுரத்தில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்.
தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பாக பயணியர் விடுதி முன்பு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் திரளான அதிமுகவினர்கலந்து கொண்டனர். இதேபோன்று கழுகுமலை கயத்தார் எட்டயபுரம் பேரூராட்சிகளிலும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
No comments