காரைக்காலில் அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழா. எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்.
காரைக்கால் மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவின் 52வது ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் அமைந்துள்ள கட்சியின் நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கும், முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படத்திற்கும் அதிமுக மாவட்ட செயலாளர் எம்.வி.ஓமலிங்கம் ஏற்பாட்டில், மாவட்ட இணை செயலாளர் ஜீவானந்தம், மாநில, மாவட்ட, தொகுதி கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து கழக கொடியை ஏற்றி அதிமுக 53வது ஆண்டு துவக்க விழாவை சிறப்பாக கொண்டாடினர். விழாவில் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினர். காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
No comments