2026ல் அதிமுக 200 இடங்களில் வெற்றி பெற்று எடப்படி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்பார் - கடந்த 3 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் கொண்டுவரவில்லை – முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு பேசுகையில் எந்த திட்டமும் கொண்டு வரமால் கடந்த 3 ஆண்டுகளாக நடக்கும் ஆட்சி திமுக ஆட்சி அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த திட்டங்களை தான் இன்றைய முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
திமுகவிற்கு மக்கள் விருப்பத்துடன் வாக்களிக்கவில்லை, சிரமப்பட்டு தான் திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை ஆட்சிக்கு வராது, அதிமுக மட்டும் தான் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்துள்ளது தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது மட்டுமின்றி தமிழகத்தின் உரிமையை பாதுகாத்தது அதிமுக தான். காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினை, இலஙகை தமிழர் பிரச்சினை,கச்சதீவு பிரச்சினை என்று அனைத்தையும் மீட்டெடுத்தது அதிமுக தான் எம்.ஜீ.ஆர் உயிரோடு இருந்திருந்தால் இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் பெற்று தந்து இருப்பார் நாடளுமன்ற தேர்தலில் மோடியா – ராகுல்காந்தியா என்பதில் மக்கள் வக்காளித்தனர்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவா – திமுகவா, எடப்படி பழனிச்சாமியா – மு.க.ஸ்டாலினா என்று தான் போட்டி இருக்கும் 2026ல் அதிமுக 200 இடங்களில் வெற்றி பெற்று எடப்படி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்பார், திமுக 3 ஆண்டுகால ஆட்சியில் சொத்து வரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டணம் உயர்வு தான் நடைபெற்றுள்ளதாகவும், திமுகவை வீட்டிற்கு அனுப்பி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவார் என்றார்.
No comments