குடியாத்ததில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்து 52 ஆண்டுகள் நிறைவுற்று 53வது துவக்க விழா
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்து 52 ஆண்டுகள் நிறைவுற்று 53வது ஆண்டு துவக்க விழா வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் கோதண்டம் மீனூர் கிராமத்தில் அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்து அப்பகுதி மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் இரண்டாவது திருப்பதி என்று கூறப்படும் மீனூர் அருள்மிகு வெங்கடேச பெருமாள் கோவிலில் கழகத் தொண்டர்களுக்காகவும் மற்றும் மக்களுக்காகவும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அவர்களும் ஒன்றாக இணைவதற்கான எண்ணத்தை தர வேண்டும் என்று சிறப்பு வேண்டுதல் மற்றும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இதில் மாவட்ட கழக இன செயலாளர் தேவிகா மற்றும் பொருளாளர் ஜெயக்குமார் துணைச் செயலாளர் சக்தி ஒன்றிய செயலாளர் ஹரி விஜய் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷயித் நகர அவைத் தலைவர் பஞ்சாசரம் நகர பொருளாளர் வாசுதேவன் ஒன்றிய துணை செயலாளர் அன்பரசு மற்றும் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments